அரசு விவகாரங்களில் அம்னோ தலையிட கூடாது! RAFIZI RAMLI!
- THINAGAREN SANGGAREN
- 18 Nov, 2026
நவம்பர் 18,
நெகிரி செம்பிலான் மாநில ஆளுநர் Tuanku Mukhriz Tuanku Munawir விவகாரத்தில் அம்னோ தலையிடக்கூடாது என முன்னாள் அமைச்சரும் BERSAMA கட்சியின் தலைவருமான Rafizi Ramli வலியுறுத்தினார். ஆளுநரைப் நீக்குவதற்காக அம்னோ செயல்படவில்லை என முன்னதாக ZAHID HAMIDI தெரிவித்தாலும் இப்போது ISMAIL LASIM நெகிரி செம்பிலான் மாநில MENTERI BESAR பதவியிலிருந்து விலகியிருப்பது சந்தேகத்தை எழுப்பியிருப்பதாக ரபீஸி ரம்லி தெரிவித்தார்.
இஸ்மாயில் லாசிம் உண்மையிலேயே முழு மனதுடன் பதவி விலகினாரா அல்லது அம்னோ தலைமை அவரைக் கட்டாயப்படுத்தியதா என ரபிஸி ரம்லி கேள்வி எழுப்பினார். மாநில ஆட்சியாளர் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடக் கூடாது. மலாய் ஆட்சியாளர்கள் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் மலாய் ஆட்சியாளர்களே மேற்கொள்வார்கள் என ரபிஸி ரம்லி தெரிவித்தார். ஆனால் நெகிரி செம்பிலான் விவகாரத்தில் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களே ஆளுநரை நீக்குவதற்காகக் குறுக்கு வழியில் ஈடுப்பட்டுள்ளதாக ரபீஸி குற்றம்சாட்டினார்.
இப்போது இஸ்மாயில் லாசிம் பதவி விலகியதும் மீண்டும் அம்னோ நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிடுவதால் அது மாநில அரசாங்கத்தின் நலனைப் பாதிக்கும் என RAFIZI RAMLI தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

