டி.ஏ.பி உறுப்பினருக்கு RM250,000 இழப்பீடு வழங்கும்படி அம்னோவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

top-news

அக்தோபர் 21,

டி.ஏ.பியின் SEPUTEH நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கின் மீது அவதூறு பரப்பிய குற்றத்திற்காக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் DATUK AKMAL SALEH RM250,000 இழப்பீடு வழங்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் டி.ஏ.பியின் திரேசா கோக்கிற்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அம்னோவின் அக்மால் அனைத்து அவதூறு கருத்துகளையும் சமூகவலைத்தலங்களிலிருந்து நீக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2024இல் அக்மல் சலே தகாத வார்த்தைகளால் திட்டி
, இஸ்லாமிய மத விவகாரங்களில் கிழவிகள் தலையிடக் கூடாது எனும்படியாகச் சமூகவலைத்தலத்தில் திரேசா கோக்கிற்கு எதிராகப் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம் அரசியலில் ஈடுபடும் தலைவர்கள் நன்னெறிகளுடன் வாதிட வேண்டும் என வலியுறுத்தியது. அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சலே RM250,000 இழப்பீட்டுடன் 50,000 ரிங்கிட் வழக்கு செலவுகளையும் சேர்த்து மொத்தம் 3 லட்சம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட அபரதாத்தைச் செலுத்த அக்மால் சலே மீன் பிடித்து வருவதாகவும்
, மீனை விற்று வரும் பணத்தில், அபராதத்தைச் செலுத்துவதாகவும் அக்மால் சலே கேலியாகச் சமூகவலைத்தலத்தில் பதிவேற்றியுள்ளார். 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *