பக்காத்தானுக்கு அம்னோ செய்யும் துரோகம்! அரசாங்கத்திலிருந்து விலகுவது நல்லது!
- THINAGAREN SANGGAREN
- 06 Sep, 2026
செப்டம்பர் 6,
பக்காத்தானுடன் ஆட்சியில் இருக்கும் பாரிசான் எதிர்கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தைகளை நடத்துவது துரோகத்தின் உச்சம் என பக்காத்தான் கூட்டணிக் கட்சியான அமானா தெரிவித்துள்ளது. ஜொகூரில் மறைமுகமாக அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்தனர். அதன் பின்னர் நெகிரி செம்பிலானில் வெளிப்படையாக அம்னோவும் பாஸ் கட்சியும் தேர்தல் கூட்டணியை அமைத்தனர். இப்போது பாஸ் கட்சியின் பேராளர் மாநாட்டில் அம்னோ கட்சியைச் சேர்ந்த பொதுச் செயலாளர் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டதுடன் ஆட்சிக் காலம் முடியும் முன்னமே தேர்தலை நடத்த வேண்டும் என பாரிசான் வலியுறுத்துகிறது என அமானா கட்சியின் தேர்தல் அமைப்பாளர் Fadhli Umar Aminolhuda தெரிவித்தார்.
அம்னோ ஒரு புனிதமான கட்சி என நாம் கருத முடியாது. கடந்த காலங்களில் நாட்டைச் சூரையாடிய அம்னோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பக்காத்தானும் பாரிசானும் ஆட்சி அமைத்தோம். ஆனால் இப்போது பாரிசான் ஒப்பந்தத்தை மீறி செயல்படுகிறது என்றால் கடந்த காலத் தவறுகளை அம்னோ மீண்டும் செய்கிறது என Fadhli Umar Aminolhuda சுட்டிக்காட்டினார். இப்போது பாஸ் கட்சி வழிநடத்தும் பெரிக்காத்தானில் கூட்டணிக் கட்சிகளாக இருப்பவர்கள் அம்னோவின் தலைமையின் மீது ஏற்பட்ட எதிர்ப்பால், அம்னோவிலிருந்து விலகியவர்கள். இப்போது அம்னோ மீண்டும் அவர்களுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது அம்னோவுக்கும் பாதிப்பு என்பதை அம்னோவினர் உணர வேண்டும் என அமானா கட்சி எச்சரித்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



