அம்னோவை பாஸ் கட்சி மனப்பூர்வமாக ஆதரிக்கும்! HADI AWANG உறுதி!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 9,

பாஸ் அம்னோ கட்சிகளுக்கிடையில் தேர்தல் கூட்டணி இல்லை என்றாலும் அம்னோவை பாஸ் கட்சி மனப்பூர்வமாக ஆதரிக்கும் என பாஸ் கட்சியின் தலைவர் TAN SRI ABDUL HADI AWANG உறுதிப்படுத்தினார். தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடாத சட்டமன்றங்களில் பாஸ் கட்சியினர் பாரிசானுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அரசியல் ஆதாயத்திற்கானது இல்லை. அது மனப்பூர்வமாக பாஸ் கட்சி அம்னோவுக்கு வழங்கும் ஆதரவு என TAN SRI ABDUL HADI AWANG தெரிவித்தார். பாரிசான் பாஸ் கூட்டணி அமைப்பதற்கான ஓர் யுக்தியாக இதனைக் கருத வேண்டாம் என பாஸ் கட்சியின் தலைவர் TAN SRI ABDUL HADI AWANG வலியுறுத்தினார். 

Johor மாநில சட்டமன்ற தேர்தலில் 56 சட்டமன்றங்களில் பாஸ் கட்சி 11 சட்டமன்றங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. BERSATU 16 சட்டமன்றங்களிலும் , MIPP 5 சட்டமன்றங்களிலும் என PERIKATAN கூட்டணி மொத்தம் 33 சட்டமன்றங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. ஆனால் பாரிசான் 56 சட்டமன்றங்களிலும் போட்டியிடுகிறது. அப்படியானால் 23 சட்டமன்றங்களில் பாஸ் கட்சியின் ஆதரவாளர்கள் பாரிசான் கூட்டணியை ஆதரிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *