DAP & PKR காட்டும் திசையில் அம்னோ! இது அம்னோவின் வீழ்ச்சிக்காலம்! - DR.MAHATHIR சாடல்

top-news
FREE WEBSITE AD

Umno அதன் தனித்தன்மையை இழந்து பல ஆண்டுகளாகிவிட்டதாக முன்னாள் பிரதமரும் அம்னோவின் முன்னாள் தலைவருமான MAHATHIR தெரிவித்துள்ளார். DAP, PKR  போன்ற கட்சிகளிடம் அம்னோ அடிப்பணிகிறது, 22 ஆண்டுகள் அம்னோவின் தலைவராக நான் இருந்த போது ஒரு போதும் DAP, PKR  கட்சிகளை விடவும் அம்னோ சிறந்த நிலையில் இருப்பதைத் தாம் உறுதிச் செய்த நிலையில் தற்போது அம்னோ DAP, PKR  கட்சிகள் காட்டும் திசையில் பயணிக்கும், தலைவர் இல்லாத கூட்டமாக மாறிவிட்டதில் தனக்கு பெருத்த வருத்தம் இருப்பதாகவும் மகாதீர் தெரிவித்தார்.

அம்னோவின் வரலாற்றில் இதுவெல்லாம் கருப்பு நாள்களாக எதிர்காலத்தில் கருதப்படும் என்பதை அவர் நினைவுருத்தினார். 1957 க்கு முன்னர் பிரிட்டிஷின் MALAYAN UNION க்கு எதிராக அரசியல் செய்த தலைவர்களின் உழைப்பையும் மகத்துவத்தையும் அம்னோ இழந்துவிட்டதாக DR.MAHATHIR சாடினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *