வீட்டு வாடகை கூட செலுத்த முடியவில்லை: பாஜகவை விட்டு விலகிய நிர்வாகி

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி: பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, தனது நிதி நெருக்கடி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகியதாகt தெரிவித்துள்ளார். வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், விரைவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

38 வயதான ஷெசாத் பூனாவாலா வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்று, பாஜகவின் முக்கிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக அறியப்பட்டார்.

சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய அவர், தனது முடிவுக்கான காரணத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சிகள் தங்களது செய்தித் தொடர்பாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை என்றும், இதனால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *