சுங்கை பக்காப் இடைத் தேர்தல்: 4,267 வாக்குகள் பெரும்பான்மையில் PN வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் வெற்றி!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஜூலை 6: சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர்  அபிடின் இஸ்மாயில் வெற்றிபெற்றார்.

56 வயதான அவர் மொத்தம் 14,489 வாக்குகளைப் பெற்று, 4,267 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்றார்.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜூஹாரி அரிஃபின் 10,222 வாக்குகளைப் பெற்றார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி (EC) மொத்தம் 208 செல்லாத வாக்குகள் விழுந்துள்ளதாகவும் 63.45% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு  தேர்தலில், மறைந்த நார் ஜம்ரி, பக்காத்தானின் நூர்ஹிதாயா சே ரோஸை தோற்கடித்து 1,563 வாக்குகள் பெரும்பான்மையில் சுங்கை பக்காப்பைக் கைப்பற்றினார்.

2008 ஆம் ஆண்டு 12வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தானின் கோட்டையாக இருந்த இத்தொகுதியில் மலாய்க்காரர்கள் 59.2% வாக்காளர்கள் உள்ளனர். சீன வாக்காளர்கள் 22.4% ஆகவும், இந்தியர்கள் மற்றும் மற்றவர்கள் முறையே 17.2% மற்றும் 1.2% வாக்காளர்களாகவும் உள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *