சுங்கை பக்காப் PN வேட்பாளாராக பாஸ் கட்சியின் அபிடின் இஸ்மாயில் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

செபராங் பிராய், ஜூன்  16: ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ள சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி,  பாஸ் கட்சியின் அபிடின் இஸ்மாயிலை வேட்பாளராக  நிறுத்துகிறது.

PAS துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், நேற்று இரவு பினாங்கில் உள்ள பண்டார்  தாசெக் முத்தியாராவில் நடந்த நிகழ்வில், கூட்டணியின் வேட்பாளராக நிபோங் தெபால் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் அபிடினை நியமித்தார்.

சுங்கை பக்காப் குடியிருப்பாளர்களின்  பிரச்சனைகளைப் பார்த்து அவர்களுக்கு உதவுவதில் தான் கவனம் செலுத்த விரும்புவதாக அபிடின் கூறினார்.

கட்சியின் இந்த நியமனத்திற்கு தாம் நன்றியுள்ளவனாக இருப்பதாகவும், தம்மால் முடிந்ததைச் செய்வேன் என்றும் அபிடின் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *