ஒற்றுமை, தேசப்பற்றை உருவாக்கும் சுங்கை சிப்புட் மெர்டேக்கா கால்பந்து போட்டி!

top-news

சுங்கை சிப்புட், அக்.7-

இங்குள்ள பல இன இளைஞர்களிடையே ஒற்றுமை, தேசப்பற்றை உருவாக்கும் பொருட்டு ஒன்பதின்மர் மெர்டேக்கா கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியை சுங்கை குருடா இளைஞர்களும், சுங்கை குருடா கால்பந்து சங்கமும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக்குழு தலைவர் கி.மணிமாறனுக்கு நன்றி கூறி தொடக்கி வைத்தார்.

பழம் பொருள் வணிக தொழிலதிபர் சி.வாசு.
மெர்டேக்கா கால்பந்து போட்டி என்றால் அனைத்து கால்பந்து ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.இந்த போட்டி ஆசிய கண்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற போட்டியாகும். இதனைத் தொடர்ந்து இந்நாட்டில். ஆங்காங்கே குறிப்பாக தோட்டப் புறங்களிலும் இப்போட்டி நடைபெற்று வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இப்போட்டியில் 14 குழுக்கள் பங்கு பெற்றன. அவற்றில் இந்திய, பூர்வகுடி மற்ற இனத்தவரும் கலந்து சிறப்பித்தனர் என்று கி.மணிமாறன் கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *