Kung Fu Hustle பட நடிகர் மரணம்!

top-news

அனைவரின் மனதில் இடம்பிடித்த வெளிநாட்டு திரைப்படங்களில் ஒன்று Kung Fu Hustle. உலக புகழ்பெற்ற நடிகர் Stephen Chow இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படத்தில் தி பீஸ்ட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் Siu-Lung Leung.இவர் The Legendary Fok, Call Me Dragon போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், Kung Fu Hustle படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் உலகளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 77 வயதாகும் நடிகர் Siu-Lung Leung கடந்த ஜனவரி 14ஆம் தேதி காலமானார். இவருடைய மரணம் பெரும் துயரத்தை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் கொடுத்துள்ளது. ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *