இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

top-news
FREE WEBSITE AD

இந்தியா, ஜூலை 25-

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள், தேர்வுத் தாள் கசிவு குற்றச்சாட்டுகள் மற்றும் கல்வி நிர்வாகம் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது ராஜினாமா கடிதத்தில், மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே இந்த முடிவை எடுத்ததாக தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய சூழ்நிலையை நாட்டின் நலனுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தாம் பொறுப்பேற்று பதவி விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக பல மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடாளுமன்றம் முதல் பொதுமக்கள் வரை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் மீது அழுத்தம் அதிகரித்த நிலையில், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா முக்கிய அரசியல் திருப்பமாகக் கருதப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *