தண்டனை பத்தாது; இஷா தாயார் உருக்கம்!
- Shan Siva
- 27 Sep, 2024
கோலாலம்பூர், செப் 27: சைபர் மிரட்டலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்
கொண்ட டிக்டோக்கர் ஈஷாவின் தாய், தன் மகள் இறப்புக்குக்
காரணமான ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டனை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில்,
அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஒரு நிருபர் தம்மிடம்
கூறியபோது தாம் நிம்மதியாக உணர்ந்ததாகவும், ஆனால் அது 12 மாதங்கள் மட்டுமே என்பதை அறிந்தபோது வேதனையாக உள்ளது
என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரான் புஸ்பா ராஜகோபால் கூறினார்.
தன் மகளிடம் இணைய பகடிவதை செய்த 44 வயதான பி. சதீஸ்குமாருக்கு 12 மாதங்கள்
சிறைத்தண்டனை விதித்த செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் குறிப்பிடுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
ஆபாசமான
கருத்துக்களை பதிவிட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட சதீஸ்குமார்,
ஜூலை 10ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரே நேரத்தில் ஒவ்வொரு
குற்றச்சாட்டிற்கும் 12 மாதங்கள் சிறை
தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது.
வெறும் 12 மாத சிறை, அவ்வளவுதானா? எங்கள் குடும்பம் இழந்ததை 12 மாதங்கள் எப்படி
ஈடுசெய்வது? என்று புஸ்பா குறிப்பிட்டுள்ளார்.
சதீஸ்குமாருக்கு
அதிகபட்சமாக 5 ஆண்டுகள்
சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *