துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட தண்டனைச் சட்டவிதிகளை அகற்ற வேண்டும்-சுஹாகாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 23-

கெடாவின் பொக்கோ செனா சிறைச்சாலையில் பிரம்படிக்கு ஆளான கைதி ஒருவர் அண்மையில் மரணமடைந்த சம்பவம் குறித்து மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) நேற்று கவலை தெரிவித்தது.அடிப்படை மனித உரிமைகளையும் மனித கண்ணியத்தையும் மீறும் வகையிலான பிரம்படி போன்ற தண்டனைகளை ஒழிக்கும்படி சுஹாகாம் மீண்டும் வலியுறுத்துகிறது என்று அறிக்கையொன்றில் அது குறிப்பிட்டது.

பிரம்படி உட்பட உடலைத் துன்புறுத்தக்கூடிய அனைத்து விதமான தண்டனைகளையும் சுஹாகாம் வன்மையாக எதிர்க்கிறது. உடல்ரீதியிலும் மனோரீதியிலும் ஊறுவிளைவிக்கக்கூடிய தண்டனைகள் அனைத்துலக மனித உரிமைகளின் தரத்திற்கு முரணானது என்று அது சுட்டிக்காட்டியது.தண்டனைச் சட்டம், குற்றவியல் சட்டம், சிறைச்சாலைச் சட்டம் ஆகியவற்றில் வரையறுக்கப்பட்ட அனைத்து விதமான உடல், மன துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட தண்டனைச் சட்டவிதிகளை அகற்ற வேண்டும் என்றும் அந்த ஆணையம் வலியுறுத்தியது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *