மென்சஸ்டர் யுனைடெட் அபார வெற்றி

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

இங்கிலாந்து, டிச. 9-

மென்செஸ்டர் யுனைட்டெட் அணி, பிரீமியர் லீகில் சாம்பியன்ஸ் லீக் தகுதி இடத்தை நோக்கிய பயணத்தில் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. இன்று அதிகாலை மோலின்யூக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸை 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது ரூபன் அமோரிமின் அணி.

போட்டியின் நாயகனாக விளங்கிய புருனோ பெர்னாண்டஸ் இரு அற்புதமான கோல்களை அடித்தார். முதல் பாதியில் பிரையன் எம்பியூமோவும், இரண்டாம் பாதியில் மேசன் மவுண்டும் தலா ஒரு கோலைப் பதிவு செய்து வெற்றியை உறுதிப்படுத்தினர்.

வோல்வ்ஸ் தரப்பில் ஜீன்-ரிக்னர் பெல்லெகார்ட் ஒரு கோலை அடித்து ஆறு போட்டிகளுக்குப் பிறகு அணிக்கு முதல் கோலைப் பெற்றுத் தந்தார். இது கடந்த அக்டோபர் 26-க்குப் பிறகு லீக்கில் அவர்கள் அடித்த முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *