தென் கொரியாவில் வரலாறு காணாத வெப்பம்: 42.5 டிகிரி செல்சியஸ் பதிவு
- Surendran Sumdraraj
- 03 Aug, 2026
சியோல், ஆக. 3-
தென் கொரியாவில் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெப்ப அலை நீடித்து வருகிறது. நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள யாங்சான் நகரில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது, கடந்த 122 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் வெப்பம் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேவையற்ற வெளிப்புற பணிகளைத் தவிர்க்கவும், அதிகளவு தண்ணீர் அருந்தவும், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் அவசரகால வெப்ப எச்சரிக்கையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வெப்ப அலை காரணமாக இதுவரை பலர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சார பயன்பாடும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மின் விநியோகத்தை சீராக பராமரிக்க அரசு கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



