வெனிசுலாவில் வரலாறு காணாத இரு நிலநடுக்கங்கள்
- Surendran Sumdraraj
- 25 Jun, 2026
கராகஸ், ஜூன் 25 –
வெனிசுலாவை ஒரே நாளில் தாக்கிய சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன. தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, முதலில் 7.2 ரிக்டர் அளவிலும், சில வினாடிகளுக்குப் பின்னர் 7.5 ரிக்டர் அளவிலும் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. இவை கடந்த ஒரு நூற்றாண்டில் வெனிசுலாவை தாக்கிய மிக வலுவான நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
நிலநடுக்கத்தால் கராகஸில் பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய சர்வதேச விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதுவரை அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இருப்பினும், பாதிப்பு மிகக் கடுமையாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



