UPSR, PMR, PT3 தேர்வுகள் இல்லை! இருக்கும் தேர்வுகள் போதும்! – கல்வி அமைச்சர்!

top-news
FREE WEBSITE AD

மாணவர்களின் கல்வித்துவத்தைச் சீர்படுத்தவும் மேம்படுத்தவும்  போதுமானத் தேர்வுகள் பள்ளிகளில் நடத்தப்படுவதே போதுமானது என்பதால் UPSR, PMR, PT3 போன்ற பொதுத் தேர்வுகள் மாணவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் இனி அத்தேர்வுகள் நடத்தப்படாது என கல்வி அமைச்சர் Fadhlina Sidek திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

இது குறித்தானக் கேள்விகள் அதிகமாகத் தொடர்ந்து எழுப்பப்படும் நிலையில் தேர்வுகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் கல்வி அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது என Fadhlina Sidek தெரிவித்தார். மாணவர்களுக்கு முதன்மையானது கல்வி. அதைக் கற்பிக்கும் வழிமுறைகளை மேம்படுத்தவும் கல்வி அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்திய பின்னர் தேர்வுகளின் எண்ணிக்களை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கலாம் என Fadhlina Sidek தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *