ஷாரூக்கானின் மெகா சாதனையை நெருங்கும் துரந்தர் திரைப்படம்!

top-news
FREE WEBSITE AD

கடந்த ஆண்டு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கும் ஓரளவு நல்ல லாபத்தை கொடுத்த ஆண்டாக அமைந்தது என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் இந்தி திரை உலகில் சமீபத்தில் வெளிவந்த துரந்தர் என்ற திரைப்படம் மிகப் பெரும் வரவேற்பை விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் பெற்று வருகிறது.

இந்த படத்தில் ஹீரோவாக ரன்வீர் சிங் நடித்திருந்தார். இருப்பினும் அவரை விடவும் அந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அக்சய் கன்னாவுக்கு தான் மிக பெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. ரஹ்மான் டக்காய்ட் என்ற கேரக்டரில் அக்சய் கன்னா கேங்ஸ்டர் ரோலில் நடித்திருந்தார்.

அவரது நடிப்பு மற்ற அனைத்து நடிகர்களையும் மிஞ்சும் அளவுக்கு இருந்ததாக சினிமா விமர்சனங்களும் ரசிகர்களும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டில் பல கோடி வசூல் செய்த படங்களில் நடித்த ஒரே நடிகர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்தி இருக்கிறார். அவர் நடிப்பில் வெளிவந்த துரந்தர் திரைப்படம்  இந்திய மதிப்பில் 1100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.

இதேபோன்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த சாவா என்ற திரைப்படம் ரூ. 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு 2000 கோடி வசூல் செய்த படங்களில் நடித்த நடிகர் என்ற சாதனையை அக்சய் கன்னா ஏற்படுத்தியிருக்கிறார்.

முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் ஒரே ஆண்டில் அவரது பதான், ஜவான், டங்கி ஆகிய படங்களின் மூலமாக 2685 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களில் நடித்த நடிகர் என்ற சாதனையை ஏற்படுத்தியிருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *