கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு!

top-news

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவுடன் கைகோர்த்துள்ள படம் சூர்யா 44 .

2D என்டர்டெயின்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் கடந்த சில நாள்களாகவே பேசுபொருளாகி வந்த நிலையில், நேற்று இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே, நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்..

குறிப்பாக 80களின் ரெட்ரோ நாயகர்களின் ஆடை மற்றும் ஃபங்க் சிகை அலங்காரத்துடன் சூர்யாவின் லுக் இந்த வீடியோவில் மாஸாக அமைந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

முன்னதாக சூர்யா 44 படப்பிடிப்புக்காக படக்குழு அந்தமான் புறப்பட்டுச் சென்ற நிலையில், தற்போது முதல் காட்சி வீடியோ வெளியாகியுள்ளது. கேங்ஸ்டர் போன்ற தோற்றத்தில் சூர்யா இந்த வீடியோவில் தோன்றியுள்ள நிலையில், இந்த வீடியோவுடன் 'காதல், சிரிப்பு, போர்' எனும் வசனம் இடம்பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குநரும் நடிகருமான உறியடி விஜயகுமார் இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக இப்படத்தில் நடிப்பதாகவும், கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசை அமைக்க உள்ளார். மேலும், இப்படத்துக்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வதாகவும், ஷஃபிக் முகம்மது அலி எடிட்டிங் பணிகளை மேற்கொள்வதாகவும் கார்த்திக் சுப்பராஜ் சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *