யூரோ கோப்பை - நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் ருமேனிய அணியை வீழ்த்தியது!

top-news

ஜெர்மனியின் முனிச்சில் நேற்று நடந்த ‘ரவுண்டு-16’ போட்டியில் நெதர்லாந்து, ருமேனிய அணிகள் மோதின. போட்டி துவங்கிய 20 வது நிமிடத்தில் சைமன்ஸ் கொடுத்த பந்தை பெற்ற கோடி கேப்கோ, கோலாக மாற்ற நெதர்லாந்து அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இதைச் சமன் செய்ய ருமேனிய வீரர்கள் எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. மாறாக மீண்டும் அசத்தினர் நெதர்லாந்து அணியினர். போட்டியின் 83வது நிமிடத்தில் பந்தை லாவகமாக கொண்டு சென்ற கேப்கோ, ருமேனிய கோல் ஏரியாவுக்குள் இருந்த மாலெனுக்கு ‘பாஸ்’ செய்தார்.

பந்தை பெற்ற வேகத்தில், அப்படியே வலைக்குள் தள்ளி கோல் அடித்தார் மாலென். முடிவில் நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து, வரும் 7ம் தேதி நடைபெறும் காலிறுதிப்போட்டியில் துருக்கி அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *