தங்கும் விடுதி வசதி கொண்ட பள்ளிகளுக்கு கண்காணிப்பு கேமரா! 5 மில்லியன் ஒதுக்கீடு
- Shan Siva
- 29 Sep, 2026
கோலாலம்பூர், செப் 29: மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சக மாணவர்களைத் துன்புறுத்தும் செயல்களைக்
கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கல்வி அமைச்சு இந்த ஆண்டு கூடுதலாக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டுடன் 333 தங்கும் விடுதி வசதி கொண்ட பள்ளிகளுக்கு (boarding
schools) கண்காணிப்பு கேமரா (CCTV)
வசதியை விரிவுபடுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில்,
குறிப்பாக இரவு நேரங்களில் மாணவர்களைக்
கண்காணிக்க உதவ, ஏப்ரல் மாதம்
முதல் 300 'MySTEP' விடுதி காப்பாளர்
உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.
துன்புறுத்தல்
சம்பவங்கள் நிகழும்போது பெற்றோர்கள் அடையும் கவலையைத் தாம் புரிந்துகொண்டுள்ளதாகவும்.
நானும் ஒரு தாய்தான். எனது குழந்தையும் இதே கல்வி அமைப்பின் கீழ் உள்ள ஒரு
விடுதியில் தங்கிப் படித்தவர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

