இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் பாராட்டு
- Surendran Sumdraraj
- 08 Oct, 2026
வாஷிங்டன், அக். 8: விமானப் பயணிகளின் உயிரைக் காப்பாற்ற அசாதாரண துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரை பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற பயணிகள் விமானத்தை துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது விமானி ஸ்மித் மச்சார் அதனை தடுக்க துணிச்சலுடன் செயல்பட்டார். பயணிகளின் உதவியுடன் துணை விமானி கட்டுப்படுத்தப்பட்டார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஸ்மித் மச்சார் தற்போது அபுதாபியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜோஷ் காட்ஹைமர், டான் பேகன் மற்றும் மைக்கேல் மெக்கால் ஆகியோர் ஸ்மித் மச்சாரைப் பாராட்டும் தீர்மானத்தை கொண்டு வந்தனர். விமானப் பயணிகளின் உயிரைக் காக்க அவர் காட்டிய அசாதாரண தைரியத்திற்கு அந்த தீர்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக கண்டித்த அமெரிக்கா, சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்களும் ஸ்மித் மச்சாரின் துணிச்சலான செயலுக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

