ரஷியாவில் தரையிறங்கிய அமெரிக்க ராணுவ சரக்கு விமானம்: சி.ஐ.ஏ. தலைவரின் பயணத்தால் பரபரப்பு
- Surendran Sumdraraj
- 26 Aug, 2026
மாஸ்கோ: அமெரிக்க விமானப்படையின் பிரமாண்டமான ‘சி-17 ஏ குளோப்மாஸ்டர்’ ராணுவ சரக்கு விமானம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரஷிய ராணுவ விமானப்படைத் தளத்தில் திடீரென தரையிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன்–ரஷியா போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை முழுமையான பலனை அளிக்கவில்லை. இதனால் அமெரிக்கா மற்றும் ரஷியா இடையிலான அரசியல் பதற்றமும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்க ராணுவ சரக்கு விமானம் ரஷியாவில் தரையிறங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து முன்கூட்டியே எந்தத் தகவலும் தங்களுக்கு இல்லை என ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



