ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் – 19 பேர் பலி
- Surendran Sumdraraj
- 03 Sep, 2026
தெஹ்ரான், செப். 3 –
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய வான்வழித் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் உள்பட 19 பேர் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஹர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை பதிக்க முயன்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இதை தடுக்கும் நோக்கில் லாரக் தீவில் அமைந்துள்ள ஈரானின் ஏவுகணை ஏவு தளங்கள் மீது முதலில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும், ஐக்கிய அரபு அமீரகத்தையும் ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. எனினும், ஈரான் ஏவிய டிரோன்கள் இரு நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா மீண்டும் ஈரானின் குஜெஸ்தான் மற்றும் ஹர்முஸ்கன் மாகாணங்களில் உள்ள பல நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. பண்டர் அப்பாஸ், குவாசம் தீவு, சிரிக், ஜஸ்க், சாம்பஹார், கோனரக் மற்றும் அஹ்வாஸ் உள்ளிட்ட பகுதிகள் தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



