ஈரானுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்குத் தடை விதிக்க நேரிடும் – அமெரிக்கா எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

வாஷிங்டன், செப். 4 –

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்வதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறும் எந்த நாட்டின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை இந்தியாவையும் மறைமுகமாக குறிக்கிறது என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி கிர்கிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் ஈரானும் தற்போது வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று தாம் கருதவில்லை என்று கூறிய அவர், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை எந்த நாடும் மீறக்கூடாது என வலியுறுத்தினார்.

மேலும், ஈரானுக்கு வருவாய் கிடைக்க உதவும் வகையில் எந்த நாடாவது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டால், அந்த நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என்று ரூபியோ எச்சரித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *