முஸ்லிம்கள் நவீன தொழில்நுட்பத்தில் தேர்ச்சிபெற வேண்டும்! -அன்வார்

top-news

கோலாலம்பூர், அக் 7: முஸ்லிம்கள் தங்களது நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் பண்புகளை விட்டுவிடாமல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

புதிய மாற்றங்களையும் அறிவையும் தேடும் நிலையில், இஸ்லாமிய நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை கைவிட்டு, நல்ல முஸ்லிம்களாக இருப்பதில் இருந்து விலகிவிடக்கூடாது என அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முஸ்லிம்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் அன்வார் தெரிவித்தார்.

புதிய அறிவாக உருவெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவை ஒரு சமூகம் புறக்கணித்தால், அது பின்தங்கிவிடும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொடர்பான மலேசியாவின் அணுகுமுறை மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றியதாக முழுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 66ஆவது சர்வதேச அல்-குர்ஆன் ஓதுதல் மற்றும் மனனம் செய்யும் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றியபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *