மனைவியின் நடத்தையில் சந்தேகம்! பாராங்கத்தியால் மனைவியைத் துரத்திய கணவருக்கு 9 மாதம் சிறை!
- Shan Siva
- 22 Oct, 2026
கோலாலம்பூர், அக். 22: மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அவரைப் பாராங்கத்தியால் மிரட்டித் துரத்திய செம்பனைத் தோட்டத் தொழிலாளிக்கு ஜொகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்பது மாதச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
42 வயதான அகமது ஃபைருஸ் முகமது என்பவர் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் முஸ்தாகிம் சுகார்னோ இந்தத் தீர்ப்பை வழங்கியதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அவரது சிறைத்தண்டனை கணக்கிடப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அகமது ஃபைருஸ், கடந்த அக்டோபர் 18ஆம் தேதி காலை 8.30 மணியளவில், செங்காராங்கில் உள்ள வீட்டில் தனது 37 வயது மனைவியைப் பாராங்கத்தியைக் காட்டி மிரட்டி துரத்தியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த மனைவி, அண்டை வீட்டிற்குத் தப்பியோடி உதவி கோரியதுடன், அதே நாளில் செங்காராங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, பிற்பகல் 1.30 மணியளவில் காவல்துறையினர் அகமது ஃபைருஸைக் கைது செய்தனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

