நான் காதலிக்கிறேன் என ஒப்புக்கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

top-news
FREE WEBSITE AD

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் ரகசியமாக உள்ளது. இருப்பினும் அவர் தொடர்பான காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை கிளப்பும்.

இந்நிலையில் தான் 73 வயது நிரம்பிய புதின் காதலில் இருப்பதை முதல் முறையாக உறுதி செய்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு அவர் நேரடியாக 'யெஸ்' என்று அவர் பதிலளித்து பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில் அந்த பெண் யார்? பின்னணி என்ன? என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உளவுத்துறை அதிகாரியாக இருந்து அந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார். இதனால் விளாடிமிர் புதின் எப்போதும் வலிமையான அதிபராக பார்க்கப்படுகிறது. எத்தகைய தடைகள், பிரச்சனைகள் வந்தாலும் தனது கொள்கையில் இருந்து மாறாமல், ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த போர் மற்றும் பிற நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு நடுவே கூட அடிக்கடி விளாடிமிர் புதினின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக அவரது காதல் குறித்த கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. தற்போது புதினுக்கு 73 வயது ஆகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக அவர் காதலில் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை விளாடிமிர் புதினே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஆண்டின் இறுதியில் நாம் இருக்கிறோம். இந்நிலையில் ஆண்டின் இறுதி பத்திரிகையாளர் சந்திப்பில் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அப்போது தொகுப்பாளர் ரெஜினாஒர்க்கோவா, விளாடிமிர் புதினிடம் அவரது காதல் விவகாரம் பற்றி கேட்டார். அதற்கு புதின், 'யெஸ்' என்று ஒரு வார்த்தையில் பதிலளித்தார்.

அதாவது நான் காதலில் இருக்கிறேன் என்பதை விளாடிமிர் புதின் ஒப்புக்கொண்டார். அவர் இதுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய ரகசியங்களை பொதுவெளியில் பகிர்ந்தது கிடையாது. அது மிகவும் ரகசியமாவே உள்ளது. இப்படியான சூழலில் விளாடிமிர் புதினின் இந்த அறிவிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் அவர் தனது காதலி யார்? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் தற்போது பலரும் புதினின் காதலி யாராக இருக்கும்? என்ற கேள்விக்கு பதில் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே அவரது காதலி இவர் தான் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது மனைவி லியுத்மிலாவை 2014ல் விவாகரத்து செய்தார். அதன்பிறகு தான் காதல் தொடர்பான கிசுகிசுக்கள் பரவி வருகிறது. இப்போது புதினின் காதலியாக கூறப்படும் பெண்ணின் பெயர் அலினா கபேவா (வயது 42).

இவர் ரஷ்யாவின் புகழ்பெற்ற பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. ஸ்வீட்சர்லாந்தில் உள்ளார். இவர் தான் புதினின் ரகசிய காதலி என சொல்லப்படுகிறது. மேலும் விளாடிமிர் புதின் -அலினா கபேவா ஆகியோருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இந்த அலினா கபேவா கடந்த 2004 ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் மொத்தம் 2 பதக்கம் வென்ற இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 9 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார். புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சியில் 2007 முதல் 2014 வரை எம்பியாக இருந்தார்.

கிரெம்ளின் சார்பு ஊடக குழுவான தேசிய மீடியா குழு இயக்குனர் & தலைவராகவும் 7 ஆண்டுகளாக செயல்பட்டார். அப்போது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 8 மில்லியன் அமெரிக்கா டாலர் அளவுக்கு அவருக்கு சம்பளம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது மனைவி லியுத்மிலாவை 2014ல் விவாகரத்து செய்தார். அதற்கும் அலினா கபேவா தான் காரணம் என கூறப்பட்டது. இருப்பினும் தற்போது வரை விளாடிமிர் புதின், அலினா கபேவா இருவரும் தங்களுக்கு இடையே எந்த வகை உறவு உள்ளது என்பது குறித்து வெளிப்படையாக கூறியது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *