வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் காலிறுதி சுற்றில் ஸ்வரேவ் மற்றும் முசெட்டி மோதல்!

top-news

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் மார்கோஸ் கைரன் உடன் மோதினார்.இதில் ஸ்வரேவ் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, அமெரிக்காவின் தியாபேவை 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் ஸ்வரேவ், இத்தாலியின் முசெட்டி உடன் மோதுகிறார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *