நாங்கள் 'செருப்பு' சின்னத்தில் போட்டியிட்டாலும் பக்காத்தானுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்! - சனுசி
- Shan Siva
- 25 Sep, 2026
கோலாலம்பூர், செப் 25: பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணி இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் எந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது என்பது குறித்து PAS கட்சி இன்னும் விவாதிக்கவில்லை என்று சனுசி நோர் தெரிவித்துள்ளார்.
PAS மற்றும் PN ஆகிய இரு தரப்பிற்கும் தேர்தல் இயக்குநராகச் செயல்படும் சனுசி, விரைவில் கூடவுள்ள PAS-இன் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்று FMT-யிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மலாக்கா தேர்தலில் PN சின்னத்தைப் பயன்படுத்த முடியாவிட்டாலும், தங்கள் முக்கிய எதிரணியாக பக்காத்தான் ஹராப்பான்தான் (PH) இருக்கும் என்று கெடா மாநில முதலமைச்சர் சனுசி நோர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
நாங்கள் PH-க்கு எதிராகப் போட்டியிட்டால், 'செருப்பு' சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட அதிக வாக்குகளைப் பெறுவார்கள் என்று அவர் கேலியாகக் கூறினார்.
பெர்சாத்து (Bersatu) கட்சி அளித்த புகாருக்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட மறுநாளே, சங்கங்களின் பதிவிலாகா (Registrar of Societies) PN கூட்டணியை நேற்று இடைநிறுத்தம் செய்தது.
மலாக்கா மாநிலச் சட்டமன்றம் புதன்கிழமையன்று கலைக்கப்பட்டது; அதனைத் தொடர்ந்து 60 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்த இடைநிறுத்த நடவடிக்கைக்குப் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என்று PN-இன் பொதுச் செயலாளர் தகியுதீன் கருத்துத் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

