வெவ்வேறு அரசியல் பின்புலமானாலும் எங்களின் அறிமுகம் வழக்கறிஞர்தான்!
- Muthu Kumar
- 02 Oct, 2024
அடிப்படையில் வழக்கறிஞர்களாக இருக்கும் மதியழகன், குலசேகரன் மற்றும் தாம் உட்பட மூவரும் வெவ்வேறு கட்சிகளின் பின்னணியைக் கொண்டிருந்தாலும், இந்திய சமூகத்தின் மீட்சியும், தமிழ் மொழியின் மேம்பாடும்தான் எங்களின் முதன்மை இலக்கு என துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
ம இ கா கட்சியின் பின்னணியைச் சேர்ந்த மதியழகன், டி.ஏ.பி கட்சியின் தூணாக விளங்கும் துணையமைச்சர் எம். குலசேகரன், பி.கே.ஆர் கட்சியில் இருந்து நான் என. வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் நாங்கள் இயங்கினாலும், எங்களின் அறிமுகமும் தொடக்கமும் வழக்கறிஞர் என்ற நிலையில்தான் இருந்தது என்றும், நம் சமுதாயத்தின் நலன் சார்ந்த விஷயங்களை முன்னெடுக்க இந்தத் தொழில் உறுதுணையாக இருந்தது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *