பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி

top-news
FREE WEBSITE AD

சென்னை: தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான அவருக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சவுகார் ஜானகி 1931-ஆம் ஆண்டு பிறந்தவர். 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

திரையுலகில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சவுகார் ஜானகி, திரைப்படங்கள் மட்டுமின்றி மேடை நாடகங்களிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். கலைத்துறையில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு 2022-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *