யு எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவின் நடைபெற்று வரும் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, போலந்தின் இகா ஸ்வியாடெக், 'நம்பர்-16' இடத்திலுள்ள ரஷ்யாவின் சம்சனோவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-4 என வசப்படுத்திய ஸ்வியாடெக், அடுத்த செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார்.ஒரு மணி நேரம், 31 நிமிடம் நடந்த போட்டியில் ஸ்வியாடெக் (6-4, 6-1) வெற்றி பெற்று, இத்தொடரில் இரண்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு நான்காவது சுற்றில் டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, பிரேசிலின் ஹதாத் மையாவுடன் மோதினார். இதில் வோஸ்னியாக்கி 2-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர் இத்தாலியின் ஜானிக் சின்னர், 'நம்பர் 14' வீரர் அமெரிக்காவின் டாமி பால் மோதினர். இதில் முதல் இரு செட்டுகளை டை பிரேக்கர் சென்று, 7-6, 7-6 என போராடி வசப்படுத்தினார் சின்னர். அடுத்த செட்டில் 6-1 என எளிதாக வென்றார். முடிவில் சின்னர் 7-6, 7-6, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *