ஒரு பெண்ணை இரு பெண்கள் தாக்கும் வீடியோ வைரல்!

top-news
FREE WEBSITE AD


பெனாம்பாங், ஜூலை 20: சபா, பெனாம்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில்,  பெண் ஒருவரை மேலும் இரண்டு பெண்கள் தாக்குவதைக் காட்டும் வீடியோ இன்று வைரலாகியுள்ளது.

இரண்டு நிமிடம்  16 வினாடிகள்  பதிவைக் கொண்ட வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண்ணை பலமுறை அறைவதும், அப்பெண் விழும் வரை அவருடைய தலைமுடி இழுக்கப்படுவதும் காட்டப்படுகிறது. அதன் பிறகு இரண்டு பெண்களும் அவரை உதைக்கத் தொடங்குகிறார்கள்.

இன்று காலை வைரலான  இந்த வீடியோ காவல்துறை கவனத்திற்கு வந்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் சாமி நியூட்டன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதுவரை  போலீஸ் அறிக்கைகள் எதுவும் வரவில்லை என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *