‘ஜுமாக்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் ஆண்டனி

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 17-

நகைச்சுவை மற்றும் பேண்டஸி பாணியில் உருவாகியுள்ள ‘ஜுமாக்கா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டரைப் பகிர்ந்த அவர், படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

அறிமுக இயக்குநர் அசோக் ராம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் முனிஷ்காந்த் மற்றும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா, ஜென்சன் திவாகர், ஜெயக்குமார், அனன்யா எஸ்.ராவ் மற்றும் வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பழைய கேமராக்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் படப்பிடிப்புக்காகப் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, பெரும்பாலான காட்சிகள் அதில் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. படத்தின் சில காட்சிகளை முன்கூட்டியே பார்த்த விஜய் ஆண்டனி, இயக்குநர் அசோக் ராம் மற்றும் படக்குழுவினரின் பணியைப் பாராட்டியுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *