விஜய் பாஜகவிற்கு மறைமுகமாக துணைபோகிறார் – திருமாவளவன் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “பா.ஜ.க. வளர்ச்சிக்கு மறைமுகமாக துணைபோகிறவர் விஜய்” என்று கூறினார். அதிமுக கட்சி பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும், அந்த கூட்டணிக்கு விஜய் மறைமுகமாக பலன் அளிக்கும் வகையில் செயல்படுகிறார் என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், சினிமா புகழை பயன்படுத்தி வாக்குகளைப் பிரிக்க முயற்சி செய்கிறார் என்றும், இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, பாஜகவுக்கு நன்மை கிடைக்கும் சூழல் உருவாகும் என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.

தலித் கிறிஸ்தவர்களைப் பட்டியலில் சேர்க்கும் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து விஜய் எந்த நிலைப்பாடும் எடுத்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிப்பதே அவரது அரசியல் நோக்கமாக உள்ளது என்றும் கூறினார்.

இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடும் விஜயின் நடவடிக்கை, திமுக எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடித்து, அதிமுக–பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்றே அவரது கருத்து என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *