த.வெ.கவில் இணைந்தவர்கள் விரைவில் ஏமாற்றமடைவார்கள்; டிடிவி தினகரன் விமர்சனம்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 2 –

தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ள அரசியல் பிரமுகர்கள் விரைவில் ஏமாற்றமடைவார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க.) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவி மற்றும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து த.வெ.கவில் இணைந்தவர்கள், எதிர்காலத்தில் தங்களது முடிவுக்காக வருந்தும் நிலை ஏற்படும் என்று கூறினார். “இன்று த.வெ.கவில் இணைந்தவர்களை, விஜய் விரைவில் நடுத்தெருவில் நிறுத்துவார்,” என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், அ.ம.மு.க. தொடர்ந்து அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்கும் என்றும், கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் விரைவில் தாங்கள் செய்த தவறை உணர்வார்கள் என்றும் தினகரன் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *