தீமையை நன்மை வென்றதைக் கொண்டாடுவதே விஜயதசமி! பிரதமர் மோடி பேச்சு

top-news

புதுடெல்லி: தீமையை நன்மையும், பொய்மையை உண்மையும் வெற்றி கொண்டதைக் கொண்டாடும் திருவிழாவே விஜயதசமி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தத் திருவிழா வெற்றியின் அடையாளமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். எத்தகைய வலிமையான எதிர்ப்புகள் வந்தாலும், உண்மை மற்றும் மனிதநேயத்தின் பக்கம் நின்றால் இறுதியில் வெற்றி நமக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையை விஜயதசமி ஏற்படுத்துவதாக அவர் கூறினார். 

இந்தியாவின் பெருமை, கண்ணியம் மற்றும் கலாசாரத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்களையும், சமூகத்தில் பிளவை ஏற்படுத்துபவர்களையும் எதிர்கொள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும், தேசிய அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதே அனைவரின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *