விக்ரம் பிரபுவின் 26-ஆவது படம் அறிவிப்பு
- Surendran Sumdraraj
- 26 Jun, 2026
சென்னை, ஜூன் 26 –
நடிகர் விக்ரம் பிரபுவின் 26-ஆவது திரைப்படம் தொடர்பான புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனர் ராகுல் தயாரிக்கும் இந்த படம், கடந்த ஏப்ரல் மாதம் 'விக்ரம் பிரபு 26' என்ற தற்காலிக தலைப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தப் படம் மூலம் விக்ரம் பிரபுவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இரண்டாவது முறையாக இணைகின்றனர். இதற்கு முன்பு இருவரும் 'சத்ரியன்' (2017) திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தனர்.
சமீபத்தில் வெளியான 'சிறை' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கதைத்தேர்வில் அதிக கவனம் செலுத்தி வரும் விக்ரம் பிரபு, புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



