ஆஸ்டன் வில்லா யங் பாய்ஸை 2-1 கோல்கணக்கில் வீழ்த்தியது

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

பாரிஸ். நவ. 28-

ஐரோப்பிய லீக் போட்டியில் ஆஸ்டன் வில்லா 2-1 என்ற கணக்கில் சுவிஸ் அணி யங் பாய்ஸை வீழ்த்தியது.இந்த வெற்றிக்குத் வித்திட்டவர் நெதர்லாந்து நட்சத்திரம் டோனியல் மாலன் – அவர் இரண்டு கோல்களையும் அடித்துக் கொடுத்தார்.

முதல் கோலை யூரி டைல்மான்ஸின் கிராஸைத் தலையால் முட்டி கோலாக்கினார் மாலன்.

முதல் பாதி முடிவதற்கு முன்பாக மார்கன் ரோஜர்ஸின் அசத்தலான உதவியைப் பயன்படுத்தி மாலன் இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

இரண்டாவது கோல் அடிக்கப்பட்டதும் யங் பாய்ஸ் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் போலீசாருடன் மோதல் வெடித்தது. போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அணியின் கேப்டன் லோரிஸ் பெனிட்டோ நேரில் சென்று ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *