வின்செண்ட் கம்பெனி பாயர்ன் முனிச் நிர்வாகியானார்

top-news

முனிச், மே 30-
பாயர்ன் முனிச்சின் அடுத்த நிர்வாகியாக முன்னாள் மென்செஸ்டர் சிட்டி நட்சத்திரம் வின்சென்ட் கம்பெனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கம்பெனி, தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த பெர்ன்லியின் நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். 
கம்பெனியை நிர்வாகியாக நியமிப்பதற்கான ஒப்பந்தத்தில் இடம்பெறும் சில அம்சங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று பாயர்ன் முனிச்சின் மேற்பார்வைக் குழுத் தலைவரான கார்ல் ஹைன்ஸ் ருமானிக் கூறினார்.
கம்பெனியைத் தேர்ந்தெடுப்பதில் கார்டியோலாவுக்குப் பெரும்பங்கு இருப்பதாக ருமானிக் தெரிவித்தார்.
2013க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் கார்டியோலா பாயர்ன் முனிச் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *