சீனாவில் தீவிரமாக பரவும் "HMPV வைரஸ்"!

top-news

கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மொத்தமாக மீண்டு வரவே சில ஆண்டுகள் வரை ஆனது. இதற்கிடையே இப்போது 5 ஆண்டுகள் கழித்து சீனாவில் மீண்டும் புத்தாண்டு சமயத்தில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹ்யூமன் மெட்டாப்நியூமோவைரஸ் என்பது நியூமோவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நெகடிவ் சென்ஸ் ஆர்என்ஏ வைரஸாகும்.

இது ஏவியன் மெட்டாப்நியூமோவைரஸ் துணைக்குழு சி உடன் நெருங்கிய தொடர்புடையது. கடந்த 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் இந்த வைரஸ் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. சில அறியப்படாத வைரஸ்களால் ஏற்படும் சுவாச தொற்று உள்ள குழந்தைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.

சீனாவில் திடீரென நிமோனியா பாதிப்பு பரவுவதாகச் சொல்லி, அதைக் கண்காணிக்க அந்நாட்டின் நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம் பைலட் கண்காணிப்பு திட்டத்தை உருவாக்கி இருந்தது. அங்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அங்குக் குளிர்காலம் நிலவும் சூழலில், வரும் காலத்தில் இந்த சுவாச நோய்களின் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அதே வேளையில் சீன சுகாதார அதிகாரிகளோ அல்லது உலக சுகாதார நிறுவனமோ (WHO) தொற்றுநோய் மற்றும் அவசர நிலை குறித்து உறுதிப்படுத்தவில்லை.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *