விஷாலின் ‘மகுடம்’ படத்தின் ‘காத்தாக வாழப்போறோம்’ பாடல் வெளியானது

top-news

நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் புதிய பாடலான ‘காத்தாக வாழப்போறோம்’ அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-ஆவது தயாரிப்பாக உருவாகும் ‘மகுடம்’ திரைப்படம் மூலம் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆரம்பத்தில் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தை, பின்னர் ஏற்பட்ட மாற்றங்களையடுத்து விஷாலே இயக்கி முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், ‘காத்தாக வாழப்போறோம்’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உணர்வுபூர்வமான வரிகள் மற்றும் இனிமையான இசையுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *