விஷாலின் “மகுடம்” பட டீசர் வெளியானது; ரசிகர்களிடம் அமோக வரவேற்பு
- Surendran Sumdraraj
- 12 Jun, 2026
சென்னை, ஜூன் 12 –
நடிகர் விஷால் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள “மகுடம்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியாகியுள்ள டீசர் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-ஆவது தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம், நடிகர் விஷால் இயக்குநராகவும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.
முன்னதாக இயக்குநர் ரவி அரசு இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் விஷாலே படத்தின் இயக்கப் பொறுப்பை ஏற்று பணிகளை நிறைவு செய்தார். தனது நீண்டகால கனவான இயக்குநர் ஆசை இந்தப் படத்தின் மூலம் நனவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



