விவசாயிகள் கடனாளிகளாக வாழும் நிலை மாற வேண்டும் - சீமான்

top-news

திருப்பூர், அக். 5 –

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகள் தொடர்ந்து கடனாளிகளாக வாழும் நிலை மாற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க கல்வியும் அறிவும் அடிப்படைத் தேவைகள் என்று கூறிய சீமான், மக்களுக்கு தரமான கல்வியை இலவசமாக வழங்குவது அரசின் கடமை என்றார். பின்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் கல்வித் தரத்துக்கு இணையாக தமிழகத்தின் கல்வி அமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வி, மருத்துவம், குடிநீர், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல துறைகள் தனியார்மயமாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற அடிப்படை சேவைகளில் அரசின் பங்கு என்ன என்பதை மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றார்.

மேலும், பிற தொழில்களில் உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயிப்பதைப் போல, விவசாயிகளுக்கும் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று சீமான் கூறினார். வேளாண் விளைபொருட்கள் வீணாகாமல் இருக்க மாநிலம் முழுவதும் நவீன குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *