வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 1 –

சென்னை கொளத்தூர் சட்டசபைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட சில மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது, சில எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகவும், ஆறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பிட்டபோது முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, தொகுதியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களையும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும், வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *