நஜீப்பின் பங்களிப்பை மறக்கவில்லை – அம்னோ மகளிர் பிரிவு

top-news

கோலாலம்பூர், செப். 10 –

முன்னாள் அம்னோ தலைவரும் முன்னாள் பிரதமருமான டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் கட்சிக்கும் நாட்டிற்கும் வழங்கிய பங்களிப்புகளை அம்னோ மகளிர் பிரிவு ஒருபோதும் மறக்கவில்லை என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் நோரைனி அகமது தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சி, பொருளாதார மாற்றம், அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு உதவித் திட்டங்களில் நஜீப்பின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார்.

அதேபோல், அம்னோ கட்சியின் வளர்ச்சி மற்றும் அரசியல் போராட்டத்திலும் நஜீப் முக்கிய பங்கு வகித்ததாக நோரைனி தெரிவித்தார்.

அரசியல் சூழ்நிலைகள் காலத்திற்கேற்ப மாறினாலும், கடந்த காலத்தில் ஒரு தலைவர் நாட்டிற்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை மறுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நஜீப் ரசாக் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மாற்றத்திற்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்கும், அம்னோவின் போராட்டத்திற்கும் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். அரசியல் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்பதற்காக அந்த வரலாற்றை அழித்துவிட முடியாது,” என்று நோரைனி கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *