நான் சத்தமாக அழ விரும்புகிறேன்! - இறந்த மாணவியின் தந்தை உருக்கம்!
- Shan Siva
- 03 Oct, 2024
பெட்டாலிங் ஜெயா, அக் 3: பள்ளி கட்டிடத்தில் இருந்து பரிதாபமாக விழுந்து
உயிரிழந்த 13 வயது சிறுமியின் நினைவாக, அச்சிறுமியின்
தந்தை உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
"குழந்தை"
என்று செல்லமாகத் தன் மகளை அழைத்து, இரண்டு நாட்கள்
தூங்க முடியாமல் இருப்பதாகவும், இனி என்னால்
நடிக்க முடியாது, எனவே, நான் சத்தமாக அழ விரும்புகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
என்னால் இனிமேல் அழாமல்
இருக்க முடியாது. மேலோட்டத்தில், நான் வலுவாகத்
தெரிகிறேன், ஆனால் அப்பாவின் இதயமும்
அதன் பலவீனமான தருணத்தை எதிர்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அச்சிறுமி தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களும்
அப்பதிவில் இடம்பெற்றுள்ளன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *