வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி!

top-news
FREE WEBSITE AD

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 6-2 என வென்ற ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.மற்றொரு போட்டியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் இத்தாலியின் முசெட்டி, பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதுகிறார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *