பாலியல் தொழிலில் ஈடுபட்ட 26 வெளிநாட்டினர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 21 Aug, 2026
ஆகஸ்ட் 21,
தேசிய குடிநுழைவுத் துறையின் நேற்று இரவு கோலாலம்பூர் Jalan Kuchai Lama வணிக வளாகத்தில் மேற்கொண்ட சோதனையில் பாலியல் தொழில் ஈடுபட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுப் பெண்களும் வளாகப் பாதுகாவலர்கள் என நம்பப்படும் வெளிநாட்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு 10.50 மணிக்குத் தொடங்கிய சோதனையில் தம்பதியர் என நம்பப்படும் தாய்லாந்து நாட்டுப் பெண்ணும் பங்களாதேஷ் ஆடவரும் உள்ளூர் ஆடவர் ஒருவருடன் 3 மியன்மார் ஆடவர்களும் 20 வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட
அனைவரும் 18 முதல் 35 வயதினர் என்றும் Thailand, Bangladesh, Myanmar, Vietnam, Indonesia ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளாகத்திலிருந்து ரொக்கப் பணங்களும் பாலியல் சேவைகளுக்கானப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத்
தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. பாலியல் சேவைகள் வழங்குவதற்காக RM260 முதல் RM400 ரிங்கிட் வரையிலும்
வசூலித்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



